Augastine Jebakumar Kavithaigal Part -5
அன்னையிலும் மேலாய் அன்பு செலுத்தினார்
அன்பாய் தேடுகிறார் என்னை அவரை நேசிக்க
ஆயிரம் காரணங்கள் சொல்லி, காலத்தில்
ஆதி அன்பை இழந்திடக்கூடுமே சபை
எதிர்ப்புகள் கண்டு துவளாமல் நிற்போம்
எது வந்தாலும் சோராமல் அன்புகூருவோம்
செழிப்பும் வந்து வளமும் சேர்ந்தால் - நற்
செய்தி கூறவே முயன்றிடுவோம்
மாயையை நம்பி மாண்டிடும் மாந்தர்
மயக்கம் தெளிந்து மன்னவனை வணங்கவே
ஏங்கி நிற்கும் நேசரின் குரல்
ஏக்கம் நீக்க நித்தமும் முயலுவோம்
தேசம் தேவனை அறிந்திட்டால் தானே
தேவ குமாரன் வெளிப்படுவார் பாரினில்
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்.
மேற்கோள் :
ஜெம்ஸ் சத்தம் - மாத இதழ் , March 2020,பக்கம் : 9.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்